அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் தொடர்களில் ஒன்று.
பெண்கள் எதிர்நீச்சல் போட்டு சாதிக்கும் கதை என்று தான் தொடர் ஆரம்பமாகும் போது கூறப்பட்டது, ஆனால் கதை ஒன்றும் அப்படி போகவில்லை.

மாறாக நாயகி கை பதிலாக வில்லன் கை தான் ஓங்கியே உள்ளது, எவ்வளவு தவறு செய்தாலும் அதில் இருந்து தப்பித்து மேலும் மேலும் பெண்களை அடிமைப்படுத்தும் விஷயங்களையே செய்து வருகிறார்.
குணசேகரனை வீடியோ வைத்து ஆட்டி வைக்கலாம் என ஜனனி தப்புக்கணக்கு போட சைலண்டாக அவர் மோசமான வில்லத்தனத்தை செய்துவிட்டார்.

புரொமோ
ஜனனியை எப்படியோ சக்தியை கடத்திவைத்ததால் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்.

அவர் ஒருபக்கம் சக்தியை எங்கெங்கே தேடிக்கொண்டு அலைகிறார். வீட்டில் என்ட்ரி கொடுத்த அறிவுக்கரசி தர்ஷன்-பார்கவி இடையில் பிரச்சனைகளை கிளப்பி கேவலமான வேலைகளை செய்ய தொடங்கிவிட்டார்.
தர்ஷன் அன்புக்கரசி கொடுத்த மாத்திரையை போட்டுக்கொண்டு உறங்க அதைவைத்து கேவலமான நாடகம் ஆடுகிறார்கள். பார்கவி இவர்கள் செய்வது நாடகம் என்பதை புரிந்துகொண்டாலும் தர்ஷன் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.