ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க அந்த வீட்டுப் பெண்களும் போராடி வருகிறார்கள்.
கொஞ்சம் எதிர்த்து அவர்கள் வெளியே வந்தாலும் முழுவதுமாக சுதந்திரம் அடைய முடியவில்லை. இப்போது கதையில் தல தீபாவளியை தர்ஷன்-பார்கவிக்காக ஜனனி, நந்தினி, ரேணுகா கொண்டாடியுள்ளார்கள்.
ஆனால் குணசேகரன் வெளியே சென்றவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை, அவர் இராமேஸ்வரத்தில் ஏதோ செய்கிறார் என்பது தெரிகிறது. காரணம் சக்தி கையில் கிடைத்துள்ள பழைய கடிதம் தான்.
புரொமோ
தற்போது எதிர்நீச்சர் தொடர்கிறது சீரியலுக்கான இன்றைய எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் நந்தினி-ரேணுகா வீட்டிற்கு வந்த தங்களது அம்மாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
பின் குணசேகரன் கதிருக்கு போன் செய்து சக்தி-ஜனனியை வீட்டைவிட்டு வெளியே விடாதே, இன்னும் 4 நாட்களில் எல்லாவற்றையும் முடித்துவிடுகிறேன் என்கிறார்.