எப்பா என்னா நடிப்புடா, உருக வைக்கும் கதிர்-ஞானம் பேச்சு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் வரும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. கோலங்கள் என்ற மாபெரும் வெற்றித் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் இயக்கிவரும் சீரியல்.
பெண்களை மையப்படுத்திய கதை என்று சொன்னாலும் பெண்கள் பெருமையாக பார்க்கும் அளவிற்கு இந்த கதைக்களத்தில் இப்போதெல்லாம் ஒன்றும் இல்லை என்பது தான் மக்களின் கருத்து. பெண்களை அடிப்பதும், மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்துவதும் என இப்படியே கதை சென்று கொண்டிருக்கிறது.

இத்தனை நாள் அறிவுக்கரசியை கூட்டணியில் வைத்தவர்கள் இப்போது அவரை வெளியே போகச் சொல்கிறார்கள்.
புரொமோ
நேற்றைய எபிசோடில், கதிர், அறிவுக்கரசியை வெளியே போகச் சொல்ல அவர் கோபத்தில் கட்டிவிட்டு வீட்டின் வெளியே வந்து உட்காருகிறார். நான் யார் என்பதை காட்டிவிட்டு தான் செல்வேன் என கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோடின் புரொமோவில், அண்ணன் சொல்லுக்கு இணங்க அப்படியே ஞானம் மற்றும் கதிர் மனைவியிடம் நமது வாழ்க்கையை பார்ப்போம் என அக்கறையாக பேசுகிறார்கள்.
அவர்களின் பேச்சுக்கு ரேணுகா, நந்தினி அடிமையாகிவிடுவார்களா அல்லது அவர்கள் போடுவது டிராமா என புரிந்துகொள்வார்களா என்பதை பொறுத்திருந்து காண்போம்.