வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, பெண் எழுச்சியை பற்றிப் பேசும் தொடராக இருக்கும் என்பது தான் ஆரம்பத்தில் கூறப்பட்டது.
ஆனால் அடிமை வாழ்க்கை வாழும் பெண்கள் எழுச்சிக்கு பதிலாக எவ்வளவு தவறு செய்தாலும் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து மீண்டும் அராஜகம் செய்யும் வில்லனின் கதையாகவே இந்த தொடர் உள்ளது என்பது ரசிகர்களின் நீண்டநாள் கருத்து.
இயக்குனர் திருச்செல்வம் இப்போது ஒளிபரப்பாகும் கதைக்களத்தை மிகவும் விறுவிறுப்பாக தான் கொண்டு செல்கிறார், ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தது போல் இல்லை.

புரொமோ
ஜனனி, சக்தியை எப்படியாவது கண்டுபிடித்துவிடுவேன் என போராடி வருகிறார்.
இன்னொரு பக்கம் தர்ஷன்-பார்கவியை எப்படியாவது பிரித்து தனது வழிக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுக்கரசியை வைத்து நாடகம் ஆடி வருகிறார்.

இன்றைய எபிசோட் புரொமோவில், அறிவுக்கரசியை விசாலாட்சி இந்த ரவுடிப் பொம்பள இங்க வந்து உட்கார்ந்துகிட்ட அவ இவ என்று பேசிக் கொண்டிருக்கிறாள் என கூற ரேணுகா இப்போது தான் அவள் ரவுடி என்பது தெரிகிறதா என்கிறார்.
அப்படியே பேச்சு வார்த்தை அதிகமாக ஒருகட்டத்தில் அறிவுக்கரசி அருவாமனை தூக்கி வைத்து ஜனனி உயிர் முதலில் போக வேண்டும் என பொறுமையாக இருப்பதாக கூற விசாலாட்சி ஷாக் ஆகிறார்.