திடீரென வீட்டிற்கு வந்த நபர், ஷாக்கில் ஜனனி, நந்தினி, ரேணுகா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி, சீரியல்களின் ராஜாவாக இருப்பவர்கள். இந்த தொடரில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சக்தி, தர்ஷன் திருமண பரபரப்பிற்கு இடையில் குணசேகரன் அறைக்கு வந்து மொபைல் போனை தேடினார். அப்போது அவருக்கு பல வருடங்கள் முன்பு ஒரு பெண் எழுதிய கடிதத்தை பார்த்தார், அதை எடுத்து வைத்துக்கொண்டார்.

குணசேகரன் அந்த கடிதத்தை தேட கடைசியில் அது சக்தியிடம் இருப்பதை தெரிந்துகொண்டார். அந்த கடிதத்தில் இருக்கும் விஷயம் என்ன என்று சக்தி தேடுவதற்குள் குணசேகரன் அதை மறைக்க சில காரியங்கள் செய்து வருகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோட் புரொமோவில், கதிர் சக்தியை அழைத்து அவன் எடுத்து வைத்துள்ள விஷயத்தை கொடுக்க சொல்லுங்கள் என்கிறார்.

இந்த பிரச்சனை ஒருபக்கம் பேசப்பட இன்னொரு பக்கம் அன்புக்கரசி குணசேகரன் வீட்டில் வந்து நிற்கிறார். அவரைக் கண்டதும் ஜனனி மற்றும் குழுவினர் ஷாக் ஆக நந்தினி அவள் இங்கே இருக்க முடியாது என்கிறார்.
ஆனால் குணசேகரன் அம்மா அவள் இங்கே தான் இருப்பாள் என வீட்டிற்குள் அழைக்கிறார். இதனால் தர்ஷன், பார்கவி என அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.