பிரச்சனையை கிளப்பிய அன்புக்கரசி, ஜனனி தர்ஷினிக்கு சொன்ன ஷாக்கிங் விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
நல்லது எவ்வளவு பலமாக உள்ளதோ அதேபோல் கெட்டதும் செம பலமாக உள்ளது.
இப்படி தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் உள்ளது. ஜனனி எப்படியோ தர்ஷன்-பார்கவி திருமணத்தை நடத்த போராடி முடித்துவிட்டார்.
குணசேகரனை ஜனனி வீடியோ வைத்து மிரட்டினார், ஆனால் நிஜமாகவே அவரிடம் வீடியோ சிக்கவில்லை, புதியதாக என்ட்ரி கொடுத்தவர் நிறைய பணம் கொடுத்து அந்த வீடியோவை கைப்பற்றிவிட்டார்.

அவர் யார் என்பது இன்னும் சஸ்பென்ஸாக தான் உள்ளது. இதற்கு இடையில் அன்புக்கரசி குணசேகரன் வீட்டிற்குள் வந்துவிட்டார், என்ன பிரச்சனை வருமோ என ஜனனி குழுவினர் பயத்தில் உள்ளனர்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், தர்ஷன்-பார்கவி அறைக்கு வந்து தங்களது துணிகளை எடுத்துக் கொண்டிருக்க அன்புக்கரசி நமக்குள் நடந்ததை மறந்துவிட்டியே என பிரச்சனை செய்கிறார்.

தர்ஷன் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை, பொய் சொல்லாதே என சண்டை போடுகிறார்.
இன்னொரு பக்கம் தர்ஷினி வீடியோ நம்மிடம் உள்ளது தானே என கேட்க ஜனனி நீங்கள் பயப்படுவீர்கள் என பொய் சொன்னேன், வீடியோ இல்லை என ஷாக் கொடுக்கிறார்.