அறிவுக்கரசியை வெளுத்து வாங்கிய தர்ஷினி, குணசேகரன் வைக்கும் போன ஆதாரம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
திருச்செல்வம் அவர்கள் இயக்கும் இந்த தொடர் ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் என்பவரின் வீட்டுப் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை பற்றிய கதையாக இந்த சீரியல் உள்ளது.
இப்போது குணசேகரனால் தாக்கப்பட்டு பரிதாப நிலையில் மருத்துவமனையில் உள்ளார் ஈஸ்வரி.
அவருக்கு இப்படி ஆனதற்கு யார் காரணம் என்பதை நிரூபிக்க ஜனனி போராடி வருகிறார்.
புரொமோ
ஜனனிக்கு, அறிவுக்கரசி மீது சந்தேகம் வர அவரிடம் உள்ள போனை எடுக்க போராடுகிறார்.
இன்றைய எபிசோட் புரொமோவில், தர்ஷினி அறிவுக்கரசியை செம அடி அடித்து போனை கேட்கிறார், ஒரு கட்டத்தில் போனை கைப்பற்றும் போது அது குணசேகரன் கையில் கிடைக்கிறது.
ஜனனி சும்மா இல்லாமல் அதில் ஆதாரம் உள்ளது என்றும் கூறிவிடுகிறார். இதனால் குணசேகரன் கையில் வீடியோ கிடைக்குமா என்ன நடக்கும் என்ற பரபரப்பு கதைக்களத்தில் ஏற்பட்டுள்ளது.