சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்கள் எழுச்சியை பற்றிய கதை, இந்த சீரியலை பார்த்தாலே அடிமையாக இருக்கும் பெண்களுக்கு ஒரு உத்வேகம் வரும் என்பது எல்லாம் பேச்சாகவே தான் உள்ளது.
கதையில் குணசேகரன் வீட்டிப் பெண்கள் சாதித்தது போல் ஒரு கதையும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
எவ்ளோ தவறு செய்தாலும் எப்போதும் வில்லனின் கை ஓங்கியபடியே இருக்கிறது, அதிலும் இந்த 2வது பாகம் தொடங்கியது முதல் பெண்கள் சாதனை என்று ஒன்றும் இல்லை.

வில்லன் கொடூரமான வேலைகள் பல செய்தாலும் அதை வெளிக்கொண்டு வர நாயகன்-நாயகிக்கு ஒரு வாய்ப்பு கூட வரவில்லை. மாறாக வில்லனுக்கு படிந்து போகும்படியான கதைக்களம் தான் இருக்கிறது, ரசிகர்களுக்கும் இந்த கதைக்களம் சுத்தமாக பிடிக்கவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா?
ஒவ்வொரு நாள் புரொமோ வரும்போதும் அதற்கு கீழ் ரசிகர்கள் தங்களது கோபத்தை காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

புரொமோ
சக்தியை வைத்து ஜனனியை மிரட்டி பல வேலைகளை சாதித்துவிடலாம் என குணசேகரன்-அறிவுக்கரசி கனவு கண்டு வருகிறார்கள். அதில் முதல்படியாக தர்ஷன்-அன்புக்கரசி திருமணம்.

வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாட்டை அறிவுக்கரசி பார்க்கிறார். இன்னொரு பக்கம் சக்தியை தேடிப்போன ஜனனி வசமாக வில்லன்களிடம் சிக்கிக் கொள்கிறார்.
கடைசியில் அவர் தப்பித்தாரா, சக்தியை காப்பாற்றினாரா என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.
நாளை எபிசோடின் பரபரப்பான புரொமோ இதோ,