குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் அடுத்து என்ன அடுத்து என்ன என பரபரப்பின் உச்சமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
சக்தியிடம் குணசேகரன் பல வருடங்களாக மறைத்து வைத்த ஒரு விஷயத்தின் கடிதம் சிக்கியுள்ளது.
அது சக்தியிடம் கிடைத்ததில் இருந்து குணசேகரன் பதற்றமாகவே உள்ளார், அந்த கடிதம் பற்றிய உண்மை யாருக்கும் தெரிய கூடாது என 4 நாள் எங்கேயோ சென்று குணசேகரன் ஏதோ செய்துவிட்டு வந்துள்ளார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் துப்பாக்கியை வைத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறார்.
குணசேகரன் தன்னுடைய எல்லா விஷயத்தையும் கொடு என கேட்க சக்தி, உங்களது போனையா இல்லை நீங்கள் சொத்து எழுதிவைத்து விட்டேன் என உங்களது தம்பிகளை ஏமாற்றி வைத்துள்ளீர்களே அதையா என கேட்கிறார்.

இதனால் சக்தியின் சட்டையை பிடித்து கோபத்தை காட்டுகிறார் குணசேகரன். பின் ஜனனி கடிதமா என கேட்க என்ன Letter என குணசேகரன் கேட்க அப்போது நல்லதா போச்சு அந்த கடிதம் எங்களிடமே இருக்கட்டும் என்கிறார் ஜனனி.
அடுத்து சக்தி-ஜனனி வீடியோ வாங்க கெவின் நண்பரை சந்திக்க செல்ல அவரை யாரோ ஒருவர் சுட்டுக்கொல்கின்றனர்.