போலீசிடம் தப்பிய ஜனனியை கடத்திய கும்பல், அடுத்து என்ன?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
அட போங்கப்பா இனி குடும்பங்கள் பார்க்கும் கதையாக இல்லை, க்ரைம் கதையாக உள்ளது. இயக்குனர் பெண்கள் சக்தியை மோசமாக காட்டுகிறார், கதையில்லாமல் ஏதேதோ செய்கிறார்.
ஒன்று திருமணம் அல்லது யாரையாவது கடத்துவது என இன்றைய எபிசோட் புரொமோவில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் புலம்பி தள்ளியுள்ளனர்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல்
வில்லனுக்கு கொஞ்சம் அடி தான் காட்டப்படுகிறது, ஆனால் முன்னேற நினைக்கும் பெண்களுக்கு எப்போதும் அடி மேல் அடி தான் காட்டப்படுகிறது. இதனாலேயே ரசிகர்கள் பலர் இனி பெண்களுக்கான கதை இல்லை, வில்லன்களுக்கான கதை என ரசிகர்கள் நிறைய விமர்சனம் செய்துள்ளனர்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், வழக்கம் போல் கதிர் வீட்டில் இருக்கும் பெண்களிடம் பிரச்சனை செய்கிறார். ஆனால் ரேணுகா தில்லாக தன்னிடம் உங்கள் அண்ணன் ஈஸ்வரி அக்காவை அடித்து துன்புறுத்திய வீடியோ என்னிடம் தான் உள்ளது என்கிறார்.

அதைக்கேட்டு கதிர் கொஞ்சம் தடுமாறினாலும் கெத்தாக பேசுகிறார். இன்னொரு பக்கம் போலீசில் இருந்து தப்பித்த ஜனனியை யாரோ கடத்தி கட்டி வைத்துள்ளனர். அவர்களும் குணசேகரன் நபர்கள் தான் என்பது ஸ்பெஷல் புரொமோ பார்க்கும் போது தெரிகிறது.
இதோ புரொமோ,