கதிர், ஞானத்திற்கு அடுத்த குண்டை தூக்கிப்போட்ட குணசேகரன், பின்னால் ராணா.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
வீட்டில் என்ன தான் நடக்கிறது என தெரியாமல் வருபவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் சமையல் செய்துகொடுத்து இருக்கிறார்கள் நந்தினி-ரேணுகா.
எல்லாவற்றையும் மறந்து குணமாகி வந்த ஈஸ்வரி கதாபாத்திரத்தை மீண்டும் ஏன் கொண்டு வந்தீர்கள், மருத்துவமனையில் இருப்பது போலவே காட்டியிருக்கலாமே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள், காரணம் அவரால் ஜனனிக்கே பிரச்சனை ஏற்படுகிறது.

விசாலாட்சி எதுவும் செய்ய முடியாமல் சும்மா இருக்கிறார். இதற்கு இடையில் ஈஸ்வரி அப்பா மற்றும் ரேணுகா அம்மா திடீரென ஜனனி மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ராணா வந்ததில் இருந்து மொத்தமாக அவன் பக்கம் சாய்ந்த குணசேகரன் மீது கடும் கோபத்தில் கதிர்-ஞானம் உள்ளனர்.

புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், சக்திக்காக ஜனனி-தர்ஷினி காத்துக் கொண்டிருக்கிறார்கள். மீடியாவில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என சக்தி-ஜனனி பேசுகிறார்கள், ஆனால் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

வீட்டில் ரேணுகா தனது அம்மாவை முதலில் இங்கே இருந்து கிளம்ப சொல்ல கதிர் இருங்கள் அவர் சொல்ல வருவதை முதலில் கேட்போம் என்கிறார்.
கடைசியில் குணசேகரன், ஞானம்-கதிரை பார்த்து உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறுங்கள், சொந்தமாக தொழில் செய்ய விரும்புகிறீர்களா என கேட்கிறார். அவரின் கேள்வி கேட்டு இருவரும் அதிர்ச்சியாகிறார்கள்.