தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல்
சன் டிவியில் ஹிட்டாக ஓடிய தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் கொண்ட ஒருவரின் வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி தங்களது சுய மரியாதையை பெறுகிறார்கள் என்பதை நோக்கிய கதை.
திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பிறகு இயக்கிய இந்த சீரியலின் முதல் பாகம் பரபரப்பாக ஓட குணசேகரனாக நடித்த மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு முடித்துவிட்டார்கள்.
அவ்வளவு தான் எதிர்நீச்சல் சீரியல் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நேரத்தில் 2ம் பாகம் சில நடிகர்கள் மாற்றத்திற்கு பிறகு தொடங்கப்பட்டது.
புரொமோ
முதல் பாகத்தில் பெண்கள் ஜெயிக்கவே வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது, ஆனால் இந்த 2ம் பாகம் அப்படி இல்லை. குணசேகரன் Vs பெண்கள் என்ற சமமான போட்டியுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் தர்ஷன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. வீட்டில் திருமண வேலைகள் நடக்க ஜீவானந்தமும் பார்கவிக்கு திருமண பரிசு கொடுக்கிறார்.
அடுத்து என்ன அடுத்து என்ன என பரபரப்பின் உச்சத்தில் தர்ஷனின் திருமண எபிசோட் உள்ளது. இன்றைய எபிசோட் புரொமோ இதோ,

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
