ஜீவானந்தம்-பார்கவிக்கு வந்த பிரச்சனை, ஜனனி போட்ட பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் சீரியல்கள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இவர்கள் வரலாற்றில் சீரியல்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இப்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்கள் டிஆர்பியில் டாப் 5ல் இருந்து வருகிறது.
ஒவ்வொரு சீரியலும் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
புரொமோ
அப்படி சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். ஈஸ்வரியை தாக்கியது யார் என்ற போராட்டம் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் தர்ஷன் திருமண பரபரப்பு இருக்கிறது.
குணசேகரன் தான் ஈஸ்வரியை தாக்கினார் என தெரிந்தாலும் சரியான ஆதாரம் இல்லாமல் ஜனனி தவிக்கிறார்.
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜீவானந்தம், பார்கவி உயிருக்கு பிரச்சனை வருகிறது. மறுபக்கம் தர்ஷன் திருமண வேலைகளில் நந்தினி மற்றும் ரேணுகாவை கலந்துகொள்ள கூறுகிறார் ஜனனி.
நீங்கள் அவர்களுடன் இருந்தால் தான் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும் என்கிறார்.