குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரன் தர்ஷன் திருமணத்தை தான் நினைத்தபடி அன்புக்கரசியுடன் நடத்தி வைக்க வேண்டும் என இருக்கிறார்.
ஆனால் ஈஸ்வரிக்கு, தர்ஷனுக்கு பார்கவியுடன் திருமணம் நடக்க வேண்டும் என்பது தான் ஆசை, அவரின் ஆசையை நிறைவேற்ற ஜனனி, நந்தினி, ரேணுகா, சக்தி, ஜீவானந்தம், பார்கவி என பலரும் போராடுகிறார்கள்.
அறிவுக்கரசி ஏற்பாடு செய்த போலீசால் ஜீவானந்தம் மற்றும் பார்கவி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஜனனி, ஜீவானந்தம், பார்கவியை தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்.
பின் மண்டபத்தில் தர்ஷனுக்கு மேக்கப போடுபவராக நந்தினி வருகிறார், அவரைப் பார்த்து தர்ஷன் சித்தி என கூற உடனே அவர் பதறுகிறார்.
தர்ஷன் சொன்னதை கதிர் கேட்டுவிட்டாரா இல்லையா, நந்தினி அவரை கடத்தி செல்லப்போகிறாரா என்பதையெல்லாம் இன்றைய எபிசோடில் காண்போம்.