அடுத்தடுத்து மரண பயத்தை காட்டி வெற்றியடையும் குணசேகரன், ஜனனி சமாளிப்பாரா?.. எதிர்நீச்சல் சீரியல் அதிரடி புரொமோ
எதிர்நீச்சல்
சன் டிவியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் பெண் அடிமை, ஆணாதிக்கம் என இந்த இரண்டு விஷயங்கள் பற்றி முக்கியமாக பேசுகிறது.
முதல் சீசனில் அடிமையாகவே இருந்து இறுதியில் வெளியே வந்த பெண்கள் 2ம் சீசனில் குணசேகரனுக்கு மாஸ் காட்டுவார்கள் என்று பார்த்தால் இன்னமும் அவரது சூழ்ச்சி வலையிலேயே சிக்கி தவித்து வருகிறார்கள்.
புரொமோ
குணசேகரன் சூழ்ச்சியை அறிந்த ஜனனி அவருக்கு பதிலடி கொடுக்கலாம் என பேச அடுத்தடுத்து அவர் பாதிக்கப்பட்டு வருகிறார்.
முதலில் குணசேகரனால் பூச்செடி விழுந்து அடிபட்டு கஷ்டப்பட்ட ஜனனிக்கு இன்னொரு மரண பயத்தை காட்டியுள்ளார். ஜனனி, குணசேகரன் என்னை ஏதோ செய்யப்போகிறார், ஏதோ பெரியதாக நடக்கப்போகிறது என கூறி பயப்படுகிறார்.
இதோ எதிர்நீச்சல் சீரியலின் ஸ்பெஷல் புரொமோ,