சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் விறுவிறுப்பு குறையாமல் இருக்கும் இந்த தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது. குணசேகரன் தன்னைப்பற்றிய எந்த விஷயமும் தெரிய கூடாது தெளிவான பிளான் போட்டுள்ளார்.

இராமேஸ்வரத்திற்கு சக்தி வந்து தேவகி பற்றி அதிகம் விசாரித்தால் அவரை கொன்றுவிட ஆட்கள் ஏற்பாடு செய்திருந்தார். இன்னொரு பக்கம் ஜனனி, ஈஸ்வரியை தாக்கிய குணசேகரன் வீடியோ கிடைக்க போராடுகிறார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

புரொமோ
தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் ஸ்பெஷல் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், சக்தியை குணசேகரன் ஏற்பாடு செய்த ஆட்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். பின் குணசேகரன், சக்தியின் கதை முடிந்தது என தம்பிகளிடம் கூறுகிறார், ஜனனியிடமும் இதுகுறித்து கூறுகிறார்.

ஜனனி, சகதிக்கு போன் செய்ய அவர் எடுக்காததால் அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயித்த சந்தோஷத்தில் குணசேகரன் உள்ளார்.
ஆனால் நிஜமாகவே சக்திக்கு என்ன ஆனது, டுவிஸ்ட் ஏதாவது உள்ளதா என்பதை பொறுத்திருந்து காண்போம். இதோ புரொமோ,