என்னது சக்தி இறந்துவிட்டாரா, போலீசிடம் சிக்கும் ஜனனி.. பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல்.
கதையில் குணசேகரன் செம கிரிமினல் பிளான் போட்டு சக்தியை கடத்த வைத்து ஜனனியை லாக் செய்துள்ளார்.

அவரை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் இருக்கும் அனைவரையும் தன் வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசியை வீட்டிற்குள் வர வைத்து கடந்த சில நாட்களாக இல்லாத அராஜகம் எல்லாம் செய்ய வைத்தார்.
எப்படியோ ஒருவழியாக ஜனனி, சக்தி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

புரொமோ
பல போராட்டங்களுக்கு பிறகு சக்தியை ஜனனி காப்பாற்றினாலும் சில சூழ்ச்சியால் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் போகிறது.

ஆனாலும் மனதை தளர விடாமல் எப்படியோ போராடி சக்தியை மருத்துவமனை அழைத்து செல்கிறார். அங்கு அவரின் நாடி பிடித்து பார்த்து மருத்துவர் ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுக்க ஜனனி ஷாக்கிங்காக பார்க்கிறார்.
அந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் சக்தி இறந்துவிட்டாரா என ஷாக்கிங் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சக்திக்கு என்ன ஆனது, காப்பாற்றப்பட்டாரா இல்லையா என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.