அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் மீது குண்டாஸ் வழக்கு போட்டு அவரை ஊர் ஊராக ஓட வைத்துள்ளார் ஜனனி.
தன்னை இப்படி ஓட வைத்துவிட்டு ஜனனி தொழில் செய்துவிடுவாளா என்ற கோபத்தில் உள்ளார் குணசேகரன். அவருக்கு உதவியாக இந்த அறிவுக்கரசி உள்ளார், ஜனனிக்கு எப்படியெல்லாம் பிரச்சனை கொடுக்கலாமோ அப்படியெல்லாம் செய்து வருகிறார்.
வண்டி வாங்கி அதனை புதியது போல் மாற்றி பின் அடுத்தடுத்த வேலைகளை ஜனனி செய்து வந்தார்.

புரொமோ
ஆனால் பெண்கள் எப்படி முன்னேறலாம், அவர்கள் எனது காலுக்கு கீழ் தான் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் அவர்களை அழிக்க அறிவுக்கரசியை பயன்படுத்தி வருகிறார்.

ஜனனி தொழில் சம்பந்தமாக முன்னேற கூடாது என்பதற்காக அறிவுக்கரசி, முல்லையை வைத்து அவர்களது வண்டியை எரிக்க முயற்சி செய்கிறார்.
முல்லை வண்டியை எரித்துவிட்டாரா, அப்படி வண்டி சேதம் ஆனால் ஜனனி எப்படி சமாளிக்க போகிறார், ஜனனி கண்டுபிடித்து பிரச்சனையில் இருந்து தப்பித்துவிட்டாரா என்பதை எல்லாம் அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.