ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. குணசேகரன் தனது அம்மாவை அழித்தவர் அவரது குடும்பத்தை சிதைத்து அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர் தான் ராணா.

அவர் குணசேகரனை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போல் நடித்து இப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என ராணா முழு நம்பிக்கை கொடுக்க குணசேகரனும் அவர் பக்கம் சாய்ந்துவிட்டார்.
குணசேகரனை தாண்டி ராணா மீது வேறு யாருக்கும் நம்பிக்கை இல்லை, முதலில் தர்ஷினி வரட்டும் என அமைதியாக இருக்கிறார்கள்.

எபிசோட்
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி, தர்ஷினி இருக்கும் இடத்திற்கு போலீஸ் தேடி வந்துவிட்டனர். இன்னொரு பக்கம் வீட்டில் குணசேகரன், ஜனனி இனி இந்த வீட்டு மருமகள் கிடையாது, சக்தி என் தம்பி கிடையாது.

இரண்டு பேரின் உறவையும் ரத்து செய்யப்போகிறேன் என்கிறார், இதற்கு ஈஸ்வரி உன் முடிவு என்ன என கேட்கிறார். உடனே விசாலாட்சி ஜனனி குறித்து பேச குணசேகரன் அவரை மிரட்டுகிறார், இந்த விஷயத்தில் ஈஸ்வரி தான் கடைசி முடிவு எடுக்க வேண்டும் என கூறுகிறார்.

ஈஸ்வரி குணசேகரன் முடிவுக்கு ஆதரிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri