குணசேகரனுக்கு செக் வைக்க ஜனனி வைத்த விஷயம், சிக்குவாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பரபரப்பான கதைக்களம் செல்கிறது.

முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனிலும் குணசேகரன் வீட்டுப் பெண்கள் அவருக்கு பயந்தே இருந்தார்கள், வழக்கம் போல் ஜனனி மட்டுமே அடிமைத்தனத்தை எதிர்த்து வந்தார்.

இப்போது கதை மாறி வருகிறது, ராவணனை குணசேகரன் கொலை செய்ய முயற்சி செய்த பிறகு அவரது வீட்டுப் பெண்கள் மிகவும் தைரியமாகிவிட்டனர்.

அவரது வீட்டுப் பெண்களை தாண்டி கதிர்-ஞானம் மாறியிருப்பது கதையில் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

குணசேகரனுக்கு செக் வைக்க ஜனனி வைத்த விஷயம், சிக்குவாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

புரொமோ

தற்போது தனது வீட்டுப் பெண்கள், தம்பிகள் தன்னைத்தாண்டி அவர்களின் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை குணசேகரனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இதனால் மீண்டும் அவர்களை தன் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறார், அவரின் முதல் ஆயுதம் ஈஸ்வரி அப்பா தான்.

குணசேகரனுக்கு செக் வைக்க ஜனனி வைத்த விஷயம், சிக்குவாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் புதிய புரொமோவில், குணசேகரன் செய்யும் விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர அவரது அறையில் ஜனனி கேமரா வைக்கிறார்.

ஆனால் திடீரென குணசேகரனுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது, அவர் எதையாவது தெரிந்துகொண்டாரா ஜனனி பிளான் பிளாப் ஆகிவிடுமா என்பதை பொறுத்திருந்து காண்போம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US