டன்டனக்கா டனக்கு டக்கா, அறிவுக்கரசியை வெளுத்து வாங்கிய குணசேகரன் வீட்டுப் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
திருச்செல்வம் அவர்கள் பெண்களை மையப்படுத்தி எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.
கதையில் அதிரடி மாற்றம், டுவிஸ்ட் வர வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். நேற்றைய எபிசோடில் கோர்ட் ஆர்டருடன் வீட்டிற்கு வருகிறார்கள் பெண்கள்.
பார்கவிக்கோ, வீட்டுப் பெண்களுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் குணசேகரன் மற்றும் அவரது தம்பி தான் காரணம் என ஜனனி அன் கோ தெளிவாக பிளான் செய்து வீட்டிற்குள் வருகிறார்கள்.
இந்த விஷயம் குணசேகரனுக்கு பெரிய இடியாய் அமைந்தது என்றே கூறலாம்.
ஸ்பெஷல்
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க ஒரு ஸ்பெஷல் புரொமோ வருகிறது.
அதில் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா, அறிவுக்கரசியை ஒரு அறைக்குள் அழைத்து வந்து வெளுத்து வாங்குகிறார்கள், அந்த புரொமோவிற்கு ரசிகர்களுக்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.