இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம்
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது கதைக்களம் உள்ளது.
ஆனால் கடந்த சில வாரங்களாக ரசிகர்களுக்கு சீரியல் குழு மீது ஒரு வருத்தம் உள்ளது. அது என்னவென்றால், அவ்வளவு தவறு செய்த குணசேகரன் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் போது பெண்களுக்கு மட்டுமே அடுத்தடுத் சோகத்தை கொடுத்து வருகிறார்கள்.

குண்டாஸ் வழக்கு இருக்கும் குணசேகரன் இப்போது பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது மீண்டும் பழையபடி பெண்கள் ஆண்களால் அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பது போல் காட்டப்படுகிறது.
பெண்கள் எழுச்சியை காட்டும் கதை என கூறிவிட்டு வில்லன் குணசேகரன் ஆதிக்கம் செலுத்தும் கதையாகவே உள்ளது என்பது ரசிகர்களின் கருத்து.

அதிரடி கதைக்களம்
ஜனனியின் கடைசி வேலை கேட்டு வந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் எப்படி இறந்தார், என்ன நடந்தது என்பது எல்லாம் தெரியவில்லை, ஆனால் கடைசி எபிசோடில் அமுதா இறந்ததை பார்த்து ஜனனி, தர்ஷினி, பார்கவி ஷாக் ஆகிறார்கள்.
இதனால் ஜனனி, போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்படுகிறார், தற்போது என்ன விஷயம் என்றால் கைதான ஜனனி போலீசிடம் இருந்து தப்பித்துவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.