எல்லா பிளானும் சொதப்பல், அதிரடியில் இறங்கிய குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது தொடர் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தனை நாட்கள் பெண்களை துன்புறுத்தி வந்த குணசேகரனை ஊர் ஊராக சுற்ற வைத்துவிட்டார்கள் அவரது வீட்டுப் பெண்கள். ஜனனி அவரது பிரச்சனையை மறந்து சொந்த தொழிலை ஆரம்பிக்கும் வேலையை துவங்கிவிட்டார்.

அந்த தொழிலும் சரியாக வரக்கூடாது என அவரது வண்டியை அண்புக்கரசி வைத்து எரிக்க பார்த்தார். ஆனால் அதனை தர்ஷினி கண்டுபிடித்து எப்படியோ வண்டியை காப்பாற்றிவிட்டார்கள்.

புரொமோ
நேற்றைய எபிசோடில், குணசேகரன் இது என் வீடு அந்த வீட்டில் ஜனனி, ரேணுகா, நந்தினி, தர்ஷன், பார்கவி ஆகியோர் வீட்டில் இருக்கக் கூடாது என போலீஸை வைத்து வெளியே அனுப்ப முயற்சி செய்தார்.
ஆனால் திடீரென அப்பத்தா என்ட்ரி கொடுத்து அந்த சீனையே மாற்றிவிட்டார். இன்றைய எபிசோட் புரொமோவில், அப்பத்தா தொழில் திறப்பு விழா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அறிவுக்கரசி, குணசேகரனுக்கு போன் செய்து போலீஸும் உங்களை தீவிரவாக தேடுகிறார்கள், நமக்கு நேரம் கிடையாது. எதுவானாலும் உடனே முடிச்சு விட்டுவிடவேண்டும் என கூறுகிறார்.
இனி எதுவும் செய்ய முடியாது, எல்லாம் கை மீறி போச்சு, உடனே முடிச்சு விட்டுவிட வேண்டும் என கூறுகிறார்.