பரபரப்பின் உச்சமாக தர்ஷன் திருமண கதைக்களம்- இன்னொருபக்கம் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்களை காட்டி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது.
ஈஸ்வரியை குணசேகரன் தான் கொடூரமாக தாக்கினார், ஆனால் அதற்கான ஆதாரம் இப்போது வரை ஜனனி கையில் சிக்கவில்லை.
ஆனால் குணசேகரன் மொபைலில் இருக்கும் ஆதாரங்களை எடுக்க அழைத்து வந்த ஒருவரிடம் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ சிக்கிவிட்டது.
அந்த பிரச்சனை ஒருபக்கம் செல்ல இன்னொரு பக்கம் தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் செய்துவைக்க குணசேகரன் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.
குட் நியூஸ்
இந்த வாரமும் திருமணம் யாருடன் நடக்கும் என்ற பரபரப்பிலேயே ரசிகர்களை வைத்திருக்க போகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. இப்படி கதைக்களம் பரபரப்பாக செல்ல ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் மற்றும் 2ம் பாகம் இரண்டையும் சேர்த்து தற்போது 1000 எபிசோடை நாளையுடன் எட்ட உள்ளதாம். இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் சீரியல் குழுவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.