குணசேகரனுக்கு வீடு தேடி வந்த ஆபத்து, ஈஸ்வரியின் அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

குணசேகரன், தவறுக்கு மேல் தவறு செய்தாலும் தனது பண பலத்தால் ராஜ்ஜியம் செய்துவரும் ஒரு நபர். 

என்ன நடந்தாலும் தனது பணம், அதிகாரத்தை வைத்து நான் தண்டனை அனுபவிப்பதில் இருந்து தப்பிப்பேன் என முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் ஜாலியாக வலம் வருகிறார்.

ஜனனி போட்ட வழக்கில் இருந்து தப்பிக்க ஜாமின் வாங்கியிருந்தவர் இப்போது அவரை அழிக்க அய்யனாருக்கு கட்டுகட்டும் வேலையில் மும்முரமாக இறங்கி இருந்தார். இதற்கு இடையில் ராவணன் செய்த சூழ்ச்சியால் அவரது ஜாமின் கேன்சல் ஆக போலீஸிடம் சிக்கக் கூடாது என ராவணன் உதவியுடன் பதுங்கியுள்ளார்.

குணசேகரனுக்கு வீடு தேடி வந்த ஆபத்து, ஈஸ்வரியின் அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Special Promo 10 Sep

புரொமோ

தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தனது ஜாமின் கேன்சல் ஆனதால் ஜனனி தான் அதற்கு காரணம் என செம கோபத்தில் உள்ளார். இதனால் இந்த கட்டுகட்டும் விஷயத்தை நிறுத்தவே கூடாது அதை செய்தே ஆக வேண்டும், ஜனனி அழிந்தே ஆகனும் என மும்முரமாக உள்ளார் குணசேகரன்.

குணசேகரனுக்கு வீடு தேடி வந்த ஆபத்து, ஈஸ்வரியின் அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Special Promo 10 Sep

இதற்கு இடையில் ஜனனி, அக்காக்களிடம் ராவணன் குறித்த உண்மையை கூறி அவர்களுக்கு சில விஷயங்கள் புரிய வைக்கிறார்.

பின் ஈஸ்வரி, ஜனனிக்கு ஒரு பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன், இந்த கட்டு கட்டும் விஷயத்தை நடக்க விடமாட்டேன் என்கிறார். பின் தலைமறைவாக இருக்கும் குணசேகரன் இடத்திற்கே போலீசார் செல்ல அவர் பயத்தின் உச்சத்தில் பதறுகிறார்.

இதோ ஸ்பெஷல் புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US