என்னை எப்படியெல்லாம் பயன்படுத்தினா, குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் இது என்னடா கதை என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் உள்ளது.
அழகான குடும்பம், சந்தோஷமாக வாழும் நபர்கள், சில பிரச்சனைகள் இப்படி காட்டுவதை தாண்டி மக்கள் எப்படியெல்லாம் ஒரு குடும்பமாக வாழ கூடாதோ அப்படிபட்ட கதைக்களமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இருக்கிறது.

ஒரு பெண்ணையே கொடுமைப்படுத்துவதும், ஓட வைப்பதும், கடத்துவதும், கொலை செய்வதும் என இப்படியே கதைக்களம் உள்ளது. குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட கொடூரன் உள்ளார் என்றால் அவரை விட கொடிய வில்லனாக ராணா களமிறங்கியுள்ளார்.
புரொமோ
தர்ஷினி இப்போது கிடைத்துவிட்டார், ஆனால் ஜனனி மீது விழுந்த பழி அப்படியே தான் உள்ளது. இதற்குள் ராணா அதிகாரத்தை வைத்து தர்ஷினி தவிர ஜனனி மற்றும் அவருக்கு உதவியவரை கைது செய்ய போலீஸை அனுப்புகிறார்.

இன்னொரு பக்கம் குணசேகரன் மொத்தமாக ராணா பக்கம் திரும்ப கதிருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னை எப்படியெல்லாம் அவன் பயன்படுத்தினா, இப்போ அப்படியே தூக்கிப்போட்டுட்டான், அவன ஏதாச்சும் செய்யனும் என பிளான் போடுகிறார்.
இதோ இன்றைய எபிசோடின் பரபரப்பு புரொமோ,