கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
கடந்த சில நாட்களாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எமோஷ்னல் காட்சிகளாக இடம்பெற்று வருகிறது.
குணசேகரன் தாக்கியதால் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரி பல போராட்டங்களுக்கு பிறகு குணமாகியுள்ளார்.

இனி ஈஸ்வரி அக்காவுடன் சேர்ந்து நாங்கள் 4 பேரும் புதிய பாதையில் பயணிப்போம் என நந்தினி சந்தோஷப்பட அந்த மகிழ்ச்சி அப்படியே சோகத்தில் முடிந்தும் போனது.
காரணம், ஈஸ்வரிக்கு பழைய விஷயங்கள் எதுவும் நியாபகத்தில் இல்லை, இதனால் அவரை எதிர்ப்பார்த்தவர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.

புரொமோ
இந்த நிலையில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் ஸ்பெஷல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், மதிவதனி, ஜனனிக்கு போன் செய்து ஒரு ஷாக்கிங் தகவல் கூறுகிறார்.

அதாவது ஆலிவர் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்வது மட்டுமின்றி, போதைப் பொருட்களையும் சட்டவிரோதமாக விற்று வருவதாகவும் கூறுகிறார். அவரின் பின்னால் ஒரு பெரிய நபர், நாம் தொடவே முடியாத ஒரு நபர் உள்ளார் என்கிறார்.

அவர் கூறியதும், ராணா ஆதிமுத்துவின் என்ட்ரி காட்டப்படுகிறது, அவர் 1000 குணசேகரனுக்கு சமமான வில்லனாக இருப்பார் என தெரிகிறது. இதோ இனி ராணா ஆதிமுத்துவாக மிரட்ட வரும் நபரின் என்ட்ரி புரொமோ,