ஆதி குணசேகரனுக்கு மாஸாக செக் வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோட் ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு எப்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோ, அதே போல் தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கும் மக்கள் அமோக வரவேற்பை தந்துள்ளனர்.
பார்கவியின் தந்தை மரணத்திற்கு பின் ஜனனி மற்றும் பெண்கள் போராடிய விதம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குணசேகரன் vs அவரது வீட்டு பெண்கள் என எதிர்நீச்சல் கதை சூடுபிடித்து சென்றுகொண்டு இருக்கிறது.
ஆதி குணசேகரன் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வார் என எதிர்பார்த்த நிலையில், அவரது தம்பி ஞானம் கைதி செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனது தம்பியை சிறைக்கு செல்ல வைத்து, தன்னை அவமானப்படுத்திய ஜனனி மற்றும் பெண்கள் யாரும் வீட்டிற்குள் வரக்கூடாது என ஆதி குணசேகரன் முடிவு செய்கிறார்.
செக் வைத்த ஜனனி.
மொத்த குடும்பமும் ஜனனி மற்றும் பெண்கள் மீது கடும் கோபத்தில் இருக்க, வீட்டிற்குள் எப்படி வரப்போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், போலீஸ் துணையோடு வீட்டிற்குள் வர மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் ஜனனி. இதன்மூலம் ஆதி குணசேகரனுக்கு செக் மேட் வைத்துள்ளார்.
ஆனாலும், ஆதி குணசேகரனின் தாய், ஜனனி மற்றும் பெண்களை வீட்டிற்குள் விடவே மாட்டேன் என வம்படியாக நிற்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம். ப்ரோமோ வீடியோ இதோ..