புதிய சீரியலில் களமிறங்கியுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதி.. அவருக்கு ஜோடி யார் தெரியுமா
எதிர்நீச்சல் பார்வதி
எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் கதாநாயகி பார்வதி.
VJ-வாக தனது பயணத்தை துவங்கி, பின் சீரியல் நடிகையாக களமிறங்கி, இன்று முக்கிய சின்னத்திரை நடிகையாக மாறியுள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய நடிப்பை அனைவரின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
போலீஸ் போலீஸ்
இந்த நிலையில், இவர் மற்றொரு புதிய வெப் சீரிஸ் ஒன்றில் களமிறங்கியுள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாரில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் வெப் சீரிஸ்தான் போலீஸ் போலீஸ்.
தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த வெப் சீரிஸில் மிர்ச்சி செந்தில், ஜெயசீலன், சுஜிதா, ஷபானா, சத்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த வெப் சீரிஸில் மிர்ச்சி செந்திலின் மனைவியாக பார்வதி என்ட்ரி கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல் போலவே இந்த வெப் சீரிஸும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.