மீம் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்! சிக்கிய போட்டியாளர்! மறுபடியும் பிக்பாஸ்க்கு வந்தவருக்கு நேர்ந்த கதி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது 99 நாட்களை எட்டிவிட்டது. நாளையுடன் நிகழ்ச்சிகான 100 வது நாள் எட்டவுள்ளது. இவ்வார இறுதி வரை இந்நிகழ்ச்சி செல்லும் நிலையில் சனி, ஞாயிறு கிழமைகளில் ஃபைனல் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
கடந்த வாரங்களில் ஆஜித், ஷிவானி வெளியேறிய நிலையில் தற்போது ரம்யா, ஆரி, பாலாஜி, கேப்ரியல்லா, ரியோ, சோம் சேகர் தற்போது இறுதி போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஃபைனல் நிகழ்ச்சிக்காக இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று ஏற்கனவே வெளியேறிய அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ஆகியோர் தற்போது போட்டியாளர்களை காண வந்துள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் வழக்கம் போல படுத்துக்கொண்டு ஓரமாக இருப்பதை நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்துள்ளனர்.
ஏற்கனவே எதையும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி ஓரமாக இருக்கிறார், மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதில்லை என ரமேஷ் குறித்து மற்ற போட்டியாளர்கள் முந்தை நிகழ்ச்சி தொகுப்புகளில் கூறியதை தற்போது மீண்டும் ரமேஷ் நிரூபித்துள்ளதாக கூறிவருகிறார்கள்.