Evil Dead Burn: திரை விமர்சனம்

By Sivaraj Jul 10, 2026 08:50 AM GMT
Report

ஈவில் டெட் படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஈவில் டெட் பர்ன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Evil Dead Burn: திரை விமர்சனம் | Evil Dead Burn Movie Review

கதைக்களம்

ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இரண்டு நண்பர்களை தண்ணீரில் இருந்து வெளியே வந்த பெண் உருவம் கொடூரமாக கொல்கிறது. அதே சமயம் வில்லியம் மற்றும் ஆலிஸ் தம்பதிக்கு இடையே குழந்தை பெற்றுக்கொள்வதில் சண்டை ஏற்படுகிறது.

வில்லியமின் தம்பி ஜோசப்பும், அவனது காதலி தியாவும் அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள். ஆனாலும் கோபத்தில் இருக்கும் வில்லியம் தனியாக காரினை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்.

Evil Dead Burn: திரை விமர்சனம் | Evil Dead Burn Movie Review

ஏரியை ஒட்டிய காட்டுப்பகுதி வழியாக அவர் செல்லும்போது இருவரை கொன்ற பெண் உருவம் அவரையும் கொல்கிறது. அதனைத் தொடர்ந்து வில்லியமின் உடலை புதைக்காமல் எரிக்க முடிவு செய்கிறனர்.

அந்த சமயம் வில்லியமின் தந்தை கடைசியாக மகனின் முகத்தை பார்க்க எரியூட்டும் அறைக்குள் செல்ல, எரிந்த நிலையில் வில்லியம் பெட்டிக்குள் இருந்து வெளியே வருகிறான். அதன் பின்னர் அவர்கள் குடும்பத்தில் நடக்கும் கோர சம்பவங்களே மீதிக்கதை.

Evil Dead Burn: திரை விமர்சனம் | Evil Dead Burn Movie Review

படம் பற்றிய அலசல்

2023 ஆம் ஆண்டில் வெளியான ஈவில் டெட் ரைஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செபாஸ்டியன் வானிசெக் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆரம்ப காட்சியில் இருந்தே பயத்தையும், பதை பதைப்பையும் ஏற்படுத்தும் இயக்குநர் கடைசி வரை அதை கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார்.

முதல் பாதி வரை நகரும் நகரும் காட்சிகள் திக் திக் மொமெண்ட்தான். குறிப்பாக டைனிங் டேபிளில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசும் காட்சி சீட்டின் நுனிக்கே நம்மை கொண்டு செல்லும்.

Evil Dead Burn: திரை விமர்சனம் | Evil Dead Burn Movie Review

இதயம் முரளி திரை விமர்சனம்

இதயம் முரளி திரை விமர்சனம்

அடுத்தடுத்து இரத்தம் தெறிக்கும் காட்சிகள் மிரள வைக்க இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று தொய்வாகிறது. எனினும் வெட்டி கொல்லும் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பதால் என்ன ஆகப்போகிறது என்று நம்மை கவனிக்க வைக்கின்றன காட்சிகள். நடிகர்களைப் பொறுத்தவரை கதாநாயகி சௌஹேய்லா அதகளம் செய்திருக்கிறார்.

பயப்படும் காட்சிகளிலும், திருப்பி அடிக்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரை விட படம் முழுக்க நம்மை பயமுறுத்துவது எர்ரோல் ஷான்ட்தான். எப்போது யாரை கொல்வாரோ என்ற பயத்தை காட்டுகிறார்.

Evil Dead Burn: திரை விமர்சனம் | Evil Dead Burn Movie Review

கிளைமேக்சில் அவரது சண்டைக்காட்சி அலறவிடும். Wednesday சீரிசில் மிரட்டிய ஹண்டர் தூகன் படம் முழுக்க அட்டகாசம் செய்துள்ளார். இது ஏன் இப்படி என்பதுபோல் ஒரு சில கேள்விகள் படம் பார்க்கும்போதே எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

க்ளாப்ஸ்

பயமுறுத்தும் காட்சிகள்

பின்னணி இசை

நடிகர்கள்

பல்ப்ஸ்

படத்தின் நீளம்

ஒரு சில லாஜிக் கேள்விகள்

மொத்தத்தில் இந்த ஈவில் டெட் பர்ன் ஒருமுறை பார்க்கலாம் என்றாலும், இரத்த குளியலை எதிர்ப்பவர்களை ஏமாற்றவில்லை.

Evil Dead Burn: திரை விமர்சனம் | Evil Dead Burn Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US