விளையாட்டால் வந்த விபரீதம், ஸ்கேட்டிங் செய்ய நினைந்து விழுந்து வாறிய நடிகை ஜெனிலியா..!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜெனிலியா.
இதனை தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் என சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்தார்.
தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்து வந்த நடிகை ஜெனிலியா தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்த ஜெனிலியா, நடிகர் Riteish Deshmukh என்பவரை திருமணம் செய்து தனது குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஜெனிலியா ஸ்கேட்டிங் காத்துக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் அவரின் கையில் அடிபட்டுள்ளதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் மிகவும் ஜாலியாக பதிவிட்டுள்ளார்.