ஜனநாயகன் படத்தில் முன்னாள் முதல்வர்! தல என அழைக்கும் விஜய்! இந்த சீன் திரையரங்கில் தெறிக்கப்போகுது..
ஜனநாயகன்
2026ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ஜனநாயகன். வழக்கமாக விஜய்யின் படங்கள் என்றால் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும், அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வருகிற 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஜனநாயகன் படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இதற்காக படக்குழு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கவுள்ளனர். இன்று மாலைக்கு நல்ல செய்தி வெளிவரும் என விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் - விஜய்
விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்தில் பல சர்ப்ரைஸ் விஷயங்களை இயக்குநர் ஹெச். வினோத் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் வரும் ஸ்பெஷல் காட்சி ஒன்றில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை காட்டியுள்ளார்களாம்.

அவரிடம் உள்ள சாட்டையை தான் விஜய்யிடம் கொடுப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எம்.ஜி.ஆர் அவர்களை, விஜய் 'தல' என இப்படத்தில் அழைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் கண்டிப்பாக இந்த சீன் திரையரங்கில் தெறிக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri