விஜய் டிவியில் புதிய ஷோவை தொகுத்து வழங்கப்போகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழில்- யாருடன் தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியல் வீட்டில் இருக்கும் தாய்மார்களின் பேவரெட் சீரியலாக அமைந்துள்ளது. தனது குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மணி, ஆனால் அவரையும், அவர் செய்யும் வேலைகளையும் மதிக்காத ஒரு குடும்பம்.
இந்த கதை பலரது வாழ்க்கைக்கு ஒத்துப்போக சீரியலுக்கு அதிக ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதில் தனது அம்மாவை தெய்வமாக நினைக்கும் ஒரு சமத்து மகனாக நடித்து வருகிறார் விஷால் என்கிற எழில்.
தற்போது இவர் சீரியலை தாண்டி விஜய் தொலைக்காட்சியிலேயே ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம். காதல் கொண்டாட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய நிகழ்ச்சியை ஜாக்குலினுடன் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறாராம்.
நிகழ்ச்சியின் போது இருவரும் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.