இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா F1..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
F1
கடந்த மாதம் 27ம் தேதி வெளிவந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள திரைப்படம் F1. கார் ரேஸை மையப்படுத்தி உருவான இப்படத்தை உலக புகழ்பெற்ற இயக்குநர் Joseph Kosinski இயக்கியிருந்தார்.
Brad Pitt, Kerry Condon, Damson Idris, Javier Bardem ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது.
இந்திய வசூல் விவரம்
உலகளவில் பல்லாயிரம் கோடிக்கும் மேல் வசூலை அள்ளி வரும் F1 திரைப்படம், இதுவரை இந்தியாவில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, Brad pitt நடிப்பில் வெளிவந்து மாஸ் காட்டி வரும் F1, இதுவரை இந்தியாவில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை Warner Bros. India அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
