முதல் படத்திலே சென்சேஷன் ஆன நடிகர் அப்பாஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
அப்பாஸ்
கொல்கத்தா நகரத்தை சேர்ந்தவர் நடிகர் அப்பாஸ் அலி, மாடலிங் துறையை சேர்ந்த அவர் கதிர் வேண்டுகொள்ளால் தமிழ் சினிமாவிற்கு காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1996-ல் அறிமுகமானார். தமிழை தொடர்ந்து அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதனிடையே நடிகர் அப்பாஸ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
சுவாரஸ்ய தகவல்கள்
கடந்த 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அப்பாஸ். அப்போது அவருக்கு சுத்தமாக தமிழ் பேச தெரியாது என்பதால், அப்பாஸ் அவரின் நண்பரை படத்தில் நடிக்க அணுகியுள்ளார். ஆனால் இயக்குநர் கதிர் அப்பாஸ் தான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டாராம்.
தனது முதல் திரைப்படத்திலே அப்பாஸுக்கு பெரிய பெயர் கிடைத்தது, ரசிகர்கள் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர்கள் அவருக்கு அதிகமாக இருந்தனர். அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்திற்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதன்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், அஜித், மாதவன் என டாப் நடிகர்களுடன் திரையில் தோன்றியுள்ளார் அப்பாஸ்.
அப்பாஸ் hairstyle என்பதை யாராலும் மறந்திட முடியாது, 1996 - 2000 ஆண்டுகளில் அவரின் hairstyle தான் மிக பெரிய ட்ரெண்டாக ரசிகர்கள் மற்றும் முடி திருத்துபவர்கள் இடையே இருந்தது. அப்போதை ரசிகர்கள் ‘Abbas Cut’ ஒரு ஸ்டைலாக வைத்திருந்தனர்.
2003 பிறகு அப்பாஸ் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார், அவரின் குடும்ப பிஸ்னஸ்-யை கையில் எடுத்து பெங்களுரூ, ஹைதரபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தி வந்தார்.
42 வயது திருமணமாகாத தமிழ் நடிகை.. நித்யானந்தாவை அடிக்கடி சந்திக்கிறாரா