சிறந்த நடிகர் ஜெயம் ரவி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்- ஓர் பார்வை
ஜெயம் ரவி
தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர். இவரது படங்கள் அனைத்தும் நல்ல தரமான கதைகளாக கொண்டு இருக்கும். காமெடி, காதல், தேசப்பற்று, சமூகம் என எல்லாம் கலந்த கலவையாக இவரது படங்கள் உள்ளன.
சின்ன வயதிலேயே அவரது அப்பாவும், எடிட்டருமான மோகன் பெரியவன் டைரக்டர், சின்னவன் ஹீரோ என அப்போதே முடிவு செய்துவிட்டாராம். தமிழில் ஹீரோவாக கலக்கும் ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்ததில்லை.
ஆனால் எடிட்டர் மோகன் தெலுங்கில் தயாரித்த பாவா பாவமரிடி, பல்நடி பௌருஷம் என இரு படங்களில் ஜெயம் ரவி குழந்தை நடசத்திரமாக நடித்திருக்கிறார்.
பரத நாட்டிய கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் முறைப்படி பரதம் கற்ற ஜெயம் ரவி, தனது 12வது வயதில் அரங்கேற்றம் செய்திருக்கிறார்.
படிப்பு என்று பார்த்தால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன், மும்பை கிஷோர் நமிட் கபூர் இன்ஸ்டியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் என படித்த ஜெயம் ரவி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.
கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட அனைத்து தற்காப்பு கலைகளையும் முறைப்படி கற்றுள்ளார்.
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் உள்ள தனது சக நடிகர்களுடன் மிகவும் நட்பாக பழக கூடியவர். ஆர்யா, விஷால், ஜீவா, கார்த்தி ஆகியோ ஜெயம் ரவிக்கு மிகவும் கிளோஸ்.
இதுவரை ஜெயம் ரவி நடிப்பில் 25 படங்களுக்கு மேல் வெளியாகிவிட்டது, அதில் 6 படங்கள் அவர் நடித்தது ரீமேக் படங்களாகும்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பிரம்மாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் கதாபாத்திரமான அருள் மொழிவர்மன் ரோலில் நடித்துள்ளார்.
2009ம் ஆண்டு ஜெயம் ரவிக்கு, ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். 2018ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக படத்தில் அவரது மகன் ஆரவ் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் பாராட்டுக்களை பெற்றார்.
16 வயதினிலே படத்திற்காக ரஜினி, கமல் வாங்கிய சம்பளம் பற்றி தெரியுமா?