நடிகர் மாதவன் சினிமாவை தாண்டி இத்தனை விஷயங்களில் ஆர்வம் கொண்டவரா?- சுவாரஸ்யமான விஷயங்கள்
நடிகர் மாதவன் அழகிய புன்னகை மூலம் தமிழ் மக்களை கவர்ந்த ஒரு சிறந்த நடிகர்.
1994ம் ஆண்டு சின்னத்திரை மூலம் தனது நடிப்பை துவங்கிய மாதவன் ஹிந்தியில் நிறைய படங்கள் நடித்துள்ளார். ரெஹ்னா ஹை தேரே தில் மெய்ன் என்ற திரைப்படத்தில் மேடி என்ற கதாபாத்திரத்தில் நடிக் அப்பெயரே அவருக்கு பட்டப்பெயராக அமைந்தது.
ஏழு வெவ்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ள மாதவனின் சில சுவாரஸ்யமான விஷயங்களை காண்போம்.
சுவாரஸ்ய விஷயங்கள்
சாக்லெட் பாய் என அழைக்கப்படும் மாதவன் ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர். இவருக்கு தேவிகா என்ற தங்கை இருக்கிறார், அவர் ஒரு மென்பொருள் பொறியாளராம், தற்சமயம் இங்கிலாந்தில் இருக்கிறார்.
இராணுவ பயிற்சி, எலக்ட்ரானிக்ஸில் பட்டம் முதல் நடிப்பது வரை பல்துறை நிபுணராக உள்ளார். மகாராஷ்ட்ராவில் என்.சி.சியில் விருது பெற்ற இவர் பிரிட்டிஷ் ராயல் ஆர்மி, ராயல் கடற்படை மற்றும் விமானப்படையில் பயிற்சி பெற்றிருக்கிறார். இராணுவத்தில் சேர நினைத்த மாதவன் வயது காரணமாக நிராகரிக்கப்பட்டார்.
1994ம் ஆண்டு ஜீ டிவியின் பனேகி ஆப்னி பாத் என்ற நிகழ்ச்சியில் தொடங்கி விளம்பரங்களில் நடித்து வந்தார். அடுத்து சீரியல்களில் தொடர்ந்து நடித்துவந்த மாதவனுக்கு 2000ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வந்த அலைபாயுதே திரைப்படம் தான் பெரிய ரீச் கொடுத்தது.
நடிப்பை தாண்டி மாதவனுக்கு ஆர்வம் உள்ள விஷயம் என்றால் கோல்ஃப் விளையாட்டு தான் 2017ம் ஆண்டு நடந்த மெர்சிடிஸ் டிராபி கோல்ஃப் போட்டியில் கூட இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மாதவன் அவரது மனைவி சரிதா பிர்ஜையை 1991ம் ஆண்டு முதல்முறை விமான பணிப்பெண்ணாக சந்தித்தார். அதன்பிறகு டேட்டிங்கில் இருந்து 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். அவர் நீச்சல் போட்டிகளில் தங்கம், வெள்ளி என நிறைய பதக்கங்கள் பெற்று வருகிறார்.
சூப்பர் சிங்கர் புகழ் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்