இதுவரை உங்களுக்கு தெரிந்திராத நடிகர் விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
விஷால்
சினிமாவில் நுழைந்த குருகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்தார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.
இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு போன்ற படங்கள் மூலம் வெற்றி கண்டார். நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
அதிலும் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் மாறு கண் வேடத்தில் நடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அப்படி நடித்ததற்காக பின்விளைவுகளை இன்றுவரை சந்திக்கிறார்.
நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல், ஆர்.கே.நகர் தேர்தல் என தேர்களில் இறங்கிய விஷால் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர் ஒருவரை தன் கூடவே வைத்திருந்தார், சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு நெருங்கிய நண்பர் என்றால் அது ஆர்யா தான், உடற்பயிற்சி மூலம் தான் இவர்கள் நட்பாக காரணமாக இருந்தது.
படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில் விஷாலுக்கு புத்தகம் படிப்பாராம், அதிலும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை படிப்பது வழக்கம் என்கின்றனர்.
விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவும் ஹீரோவாக நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த பூப்பறிக்க வருகிறோம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
கவுண்டமணியின் தீவிர ரசிகரான விஷால் மற்றவர்களிடம் பேசும்போது கவுண்டமணியின் கவுண்டர்களை கலந்து பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பாராம்.
சைக்கிளிங் விஷாலுக்கு மிகவும் பிடிக்குமாம், பெரும்பாலான நேரம் சைக்கிளில் படப்பிடிப்பு தளத்திற்கு வருவாராம். தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய திரு, விஷாலுக்கு மிகவும் நெருக்கமாம்.
பாண்டியநாடு வரை அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் தயாரிப்பில் நடித்துவந்துள்ளார் விஷால். பின் இடையில் பிரச்சனை ஏற்பட அந்த நேரத்தில் தான் விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனது அம்மா-அப்பாவுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா- வெளிவந்த அழகிய புகைப்டங்கள்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
