எடா மோனே... ஆவேசம் 2 குறித்து செம மாஸ் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்
ஆவேசம்
தென்னிந்திய அளவில் திறமையான நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆவேசம்.

ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிதுன் ஜெய், சர்ஜின், ரோஷன், பிரணவ் என பலரும் நடித்திருந்தனர். அட்டகாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர்.

குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் ரங்கா கதாபாத்திரம், சர்ஜின் ஏற்று நடித்திருந்த அம்பன் கதாபாத்திரத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆவேசம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஆவேசம் 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.
ஆவேசம் 2
இந்த நிலையில், சமீபத்தில் ஆவேசம் 2 குறித்து நடிகர் ஃபகத் ஃபாசில் பேசியுள்ளார். இதில், "ஆவேசம் 2 எப்போது என நான் எங்கு போனாலும் கேட்கிறார்கள். கண்டிப்பாக அந்த படம் உண்டு. 2027 அல்லது 2028ல் தொடங்கிவிடுவோம்" என கூறியுள்ளார்.

புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu