லோகேஷ் கனகராஜ் படத்தில் இரண்டு வில்லன்கள்.. பிரமாண்டமாக தயாராகும் பென்ஸ் படம்
பென்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் உருவாகவுள்ளது.
இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சினிமாவில் களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் தயாரிப்பில் அடுத்ததாக பென்ஸ் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து டைட்டில் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பகத் பாசில் - எஸ்.ஜே. சூர்யா
இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பகத் பாசில் இருவரும் வில்லன்களாக நடிக்கவுள்ளார்களாம். ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவுடன் ஜிகர்தண்டா படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். ஆனால் பகத் பாசில் உடன் ராகவா லாரன்ஸ் இணைவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan