எரியும் ஜாதி வெறியில் எண்ணெய் ஊற்றிய பஹத் பாசில்.. ரத்னவேலு என்ன செய்திருக்கிறார் பாருங்க
மாமன்னன் படம் சமீபத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தியேட்டரில் வந்த போது நடந்த விவாதங்களை விட தற்போது ஓடிடி ரிலீசுக்கு நடக்கும் விஷயம் அப்படியே தலைகீழாக இருக்கிறது.
ஜாதி வெறிகொண்ட வில்லனாக படத்தில் வந்த ரத்னவேலு கதாபாத்திரத்தை தான் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் வரும் அவரது காட்சிகளை எடுத்து ஜாதி பெருமை பேசும் பாடல்கள் இணைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அவர் எங்க ஜாதி என பல்வேறு பிரிவினரும் சொந்தம் கொண்டாடி வருவது இன்னொரு பக்கம் நடந்து வருகிறது.
எண்ணெய் ஊற்றிய பஹத்
தற்போது ரத்னவேலுவை நெட்டிசன்கள் கொண்டாடுவது தீவிரமாகி மீடியாக்களில் கூட செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதில் எண்ணெய் ஊற்றி இன்னும் எரியவைக்கும் விஷயம் ஒன்றை பஹத் பாசில் செய்து இருக்கிறார்.
ரத்னவேலு கதாபாத்திரம் மாஸாக இருக்கும் மூன்று போட்டோக்களை தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படமாக பஹத் வைத்து இருக்கிறார்.
அந்த போட்டோவையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து ஜாதி பெயரை குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்.
சூப்பர்ஹிட் சீரியலின் 2ம் பாகம் எடுக்கும் திருமுருகன்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
