ஹாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த பஹத் பாசில்! அவரே சொன்ன காரணம்
நடிகர் பஹத் பாசில் மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் மிரட்டலான நடிப்பை கொடுத்து வருகிறார். வில்லன் ரோலாக இருந்தாலும் சரி, குணச்சித்திர ரோல் ஆக இருந்தாலும் சரி அவரது நடிப்புக்கு எப்போதும் பாராட்டு குவிகிறது.
அதனால் அவருக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் குவிந்துகொண்டே இருக்கிறது.
ஹாலிவுட் பட வாய்ப்பு நிராகரித்தேன்
இந்நிலையில் பஹத் பாசில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஹாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்ததாக கூறி இருக்கிறார்.
The Revenant, Birdman போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Alejandro González Iñárritu இயக்கும் படத்தில் நடிக்க தான் பஹத் பாசிலுக்கு வாய்ப்பு தேடி வந்து இருக்கிறது.
அமெரிக்காவில் தங்கி நான்கு மாதங்கள் அங்கு இருப்பவர்களுக்கு accentல் பேச பழக வேண்டும் என பஹத்திடம் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு சம்பளம் கூட கொடுக்க மாட்டார்கள், அதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என சொல்லி அந்த வாய்ப்பே வேண்டாம் என நிராகரித்துவிட்டேன் என பஹத் பாசில் கூறி இருக்கிறார்.

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் - யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? IBC Tamilnadu
