பட்டன் போன் பயன்படுத்தும் நடிகர் பஹத் பாசில்.. அதன் விலையை கேட்டு ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி
நடிகர் பஹத் பாசில் மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகராக இருந்து வருகிறார். குணச்சித்திர ரோல் என்றாலும் சரி வில்லன் ரோல் என்றாலும் சரி அவர் மிரட்டலான நடிப்பை கொடுப்பவர்.
பஹத் பாசில் புஷ்பா 2 படத்திற்காக சுமார் 8 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருந்தார். பஹத் பாசில் மனைவி நஸ்ரியாவும் பிரபலமான ஹீரோயின் தான்.
பட்டன் போன்
மற்ற நடிகர்கள் எல்லோரும் விலையுயர்ந்த லேட்டஸ்ட் போன்களை பயன்படுத்தும் நிலையில் நடிகர் பஹத் பாசில் தற்போதும் பட்டன் போன் பயன்படுத்துவதும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆவர் பட்டன் போன் பயன்படுத்தும் வீடியோவும் வைரல் ஆகி இருக்கிறது. அந்த போன் Vertu என்று நிறுவனம் தயாரித்த போன் ஆகும்.
அதன் விலை 10 லட்சம் ரூபாய் என்கிற தகவல் தான் ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஷாக் கொடுத்து இருக்கிறது.
17 வருடங்கள் பழமையான Vertu Ascent Retro Classic Keypad Phone மாடலின் விலை $11,920 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.