17 வருடத்திற்கு முந்தைய போனை பயன்படுத்தும் பகத் பாசில்.. இத்தனை லட்சமா?

By Yathrika Jul 18, 2025 12:00 PM GMT
Report

பகத் பாசில்

மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான பாசிலின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க களமிறங்கியவர் பகத் பாசில்.

இவர் 2000ம் ஆண்டு தனது தந்தை இயக்கிய கையேதும் தூரத்தில் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தவர் தமிழில் வேலைக்காரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அதன்பின் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்தவர் இப்போது வடிவேலுவுடன் மாரீசன் படத்தில் நடித்துள்ளார்.

17 வருடத்திற்கு முந்தைய போனை பயன்படுத்தும் பகத் பாசில்.. இத்தனை லட்சமா? | Fahadh Faasil Viral Mobile Photo Details

நடிகரின் போன்

பகத் பாசில் சமூக வலைதளங்களோ நவீன டெக்னாலஜியோ என எதையும் பயன்படுத்துவது இல்லை.

சமீபத்தில் பகத் பாசில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பயன்படுத்திய பட்டன் போன் விவரம் வைரலாகியுள்ளது.

17 வருடத்திற்கு முந்தைய போனை பயன்படுத்தும் பகத் பாசில்.. இத்தனை லட்சமா? | Fahadh Faasil Viral Mobile Photo Details

இங்கிலாந்தை சேர்ந்த கையால் வடிவமைக்கப்படும் ஆடம்பர ரக மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்றான வெர்து என்ற நிறுவனத்தின் தயாரிப்பையே அவர் பயன்படுத்தி வருகிறார்.

உலகளவில் மிகக் குறைவானவர்களே பயன்படுத்தும் இந்த Vertu Ascent Ti போனின் விலை ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. 17 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2008ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த போனையே பகத் பாசில் இன்னும் பயன்படுத்தி வருகிறார்.   

17 வருடத்திற்கு முந்தைய போனை பயன்படுத்தும் பகத் பாசில்.. இத்தனை லட்சமா? | Fahadh Faasil Viral Mobile Photo Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US