பாலிவுட்டில் அறிமுகமாகும் நஸ்ரியாவின் கணவர்.. ஜோடியாகும் பிரபல நடிகை

Bhavya
in பிரபலங்கள்Report this article
பகத் பாசில்
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பகத் பாசில்.
தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோவாக வலம் வந்த பகத் பாசில், 2017ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து, பகத் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது, இவர் வில்லனாக நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், அடுத்து பகத் பாசில் நடிக்கப்போகும் படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகை
அதன்படி, பகத் பாலிவுட்டில் அனிமல் படத்தின் புகழ் நடிகை திரிப்தி டிம்ரியுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இம்தியாஸ் அலி இயக்கவுள்ளார். இதன் மூலம் பகத் பாசில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.