பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் பெயரில் நடந்த பண மோசடி- என்ன நடந்தது, விவரம் இதுதான்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் செம கெத்தாக நடித்து வருபவர் குமரன்.
இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், என் பெயரை நம்பி யாரும் நம்பி விடாதீர்கள் என பதிவு போட்டுள்ளார்.
பிரபலத்தின் பதிவு
அதில் தன்னுடைய பெயரில் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டு போலியாக சிலர் அடுத்தவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு இருக்கிறார்.
அத்தோடு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கப்பட்டு சிலரிடம் சாட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்றும் அப்போது அந்த ஐடியில் இருந்து சிலரிடம் whatsapp நம்பர் கேட்டு தொந்தரவு செய்த ஸ்க்ரீன் ஷாட் முதலியவற்றையும் குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.