மாநாடு காலெக்ஷன் குறித்த பொய்யான அறிவிப்பு ! பின்னணியில் நடிகர் சிம்பு !
பொய்யான காலெக்ஷன்
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் மாநாடு.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது, டைம் லூப் குறித்த திரைப்படமாக உருவான மாநாடு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது என்றே கூறலாம்.
இந்நிலையில் பிரபல சினிமா பிரமுகரான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் மாநாடு திரைப்படம் குறித்து பேசியிருந்தார்.
அதில் மாநாடு படத்தின் சக்ஸஸ் மீட்டின் போது மாநாடு திரைப்படம் 100 கோடி வசூலித்தது என அறிவித்தால் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என தயாரிப்பாளரிடம் சிம்பு சொன்னதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
அதற்கு திருப்பூர் சுப்ரமணியம் மாநாடு வசூல் எவ்வளவு என கேட்டதற்கு தயாரிப்பாளர் 71 கோடி தான் வசூலித்துள்ளது என்றவுடன் திருப்பூர் சுப்ரமணியம் பிறகு ஏன் பொய்ச்சொல்ல வேண்டும். சிம்பு வரவில்லை என்றால் என்ன! பின் அவர் இல்லாமலே நிகழ்ச்சி நடந்தது என பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.
[836XH
தாலியுடன் நயன்தாரா ! திருமணம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அழகிய பதிவு...
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri