பேமிலி மேன் 2 சர்ச்சை கதாபாத்திரத்திற்காக மன்னிப்பு கேட்ட சமந்தா ! என்ன கூறியுள்ளார் பாருங்க
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரேமில் வெளியான வெப் தொடர் தான் பேமிலி மேன் 2 . இந்த தொடர் வெளியானது முதல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி தமிழகத்தில் பெரியளவில் சர்ச்சையாகவும் பேசப்பட்டது.
அதன்படி ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்தும் இந்த தொடருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது, மேலும் சமந்தாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சமந்தா அளித்துள்ள பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். அதில் "தி பேமிலிமேன் 2 வெளியாகும் முன்பு வந்த கண்டனம் அந்த தொடர் வெளியான பிறகு நின்று விட்டது போல் தான் எனக்கு தெரிகிறது.
ஆனாலும் நான் அந்த கேரக்டரில் நடித்ததை வெறுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உண்மையாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. நான் அந்த தொடரில் உள்ள ராஜி என்ற கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன், எனது பங்கு அது மட்டும் தான். அந்த கேரக்டரால் யாராவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.