சந்திக்க மறுத்த இயக்குனர், வேதனையாக உள்ளது... கதறி கதறி அழும் வையாபுரி, வீடியோ இதோ
நடிகர் வையாபுரி
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனம் பெற்ற எத்தனையோ காமெடி நடிகர்கள் உள்ளார்கள்.
அப்படி ரசிகர்கள் கொண்டாடிய நடிகர்களில் ஒருவர் தான் வையாபுரி. விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

வீடியோ
தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். சமீபத்தில் இன்ஸ்டா பக்கம் திறந்து அதில் நிறைய விஷயங்களை பகிர்ந்து வந்தார்.
இன்ஸ்டாவில் இணைந்த வையாபுரி குறைந்த நாட்களிலேயே ஒரு லட்சம் ஃபாலோயர்களை எட்டியுள்ளார். இதற்காக அவர் ஒரு வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி சம்பவத்தை கூறியிருக்கிறார். ஒரு புரொடக்ஷ்ன் மேனேஜர் அழைத்ததால் இயக்குனர் ஒருவரைச் சந்திக்கச் சென்றேன்.
அவர் பழைய ஆள், இன்ஸ்டாகிராமில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள் என்று என்னைச் சந்திக்கவே அவர் மறுத்துவிட்டார். அது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. இன்றைய இயக்குநர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்.
என் அனுபவங்களைப் பகிரவும் 'நானும் இருக்கிறேன்' என்பதை நினைவூட்டவும் எதுவுமே தெரியாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினேன். இன்று என்னை ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.